பொது

தவறான மத போதனைகளைப் பரப்பும் இயக்கம் நாட்டில் இருப்பதாக கூறப்படுவதற்கு விளக்கமளிக்க வேண்டும்

11/12/2025 02:36 PM

புத்ராஜெயா, 11 டிசம்பர் (பெர்னாமா) --  தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தவறான மத போதனைகளைப் பரப்பும் இயக்கம் நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விளக்கமளிக்க பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முஹமட் அஸ்ரி சைனுல் அபிடின் முன்வர வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

சட்டத்தின் அடிப்படையில் உடனடி விசாரணை மேற்கொள்ள அமலாக்கத் தரப்பினருக்குத் தகவல்களை வழங்குவது, அக்குற்றஞ்சாட்டுகளை முன்வைத்த தரப்பினரின் கடமை என்று என்று அவர் கூறினார்.

''குறிப்பிடப்பட்டடதுபோல தகவல்கள் தம்மிடம் இருந்தால், அமலாக்க அதிகாரிகளுக்கு முழுமையான தகவல்களை வழங்க நான் முதலில் டாக்டர் மஸ்ஹாரியை அழைக்கிறேன். இதுபோன்ற சம்பவம் இருப்பதாக கூறும் தரப்பினர், அமலாக்க அதிகாரிகளான போலீசாரிடம் தகவல்களை வழங்க முன்வர வேண்டியது அவர்களின் கடமையாகும். போலீசில் குறிப்பாக சிறப்புக் கிளையில் எங்களுக்கு ஒரு பிரிவு உள்ளது. தவறான மத போதனை பற்றிய அத்தியாயங்கள் கொண்ட சிறப்புப் பிரிவாகும்'', என்றார் அவர்.

அனைத்து மதங்களையும் உள்ளடக்கி தவறான மத போதனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்பு கிளை ஒரு சிறப்பு பிரிவைக் கொண்டுள்ளதாக, சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றஞ்சாட்டுகள் குறித்து எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் போலீசாருக்கு இதுவரை அதிகாரப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நபர்களை உள்ளடக்கிய தென் கொரியாவைச் சேர்ந்த ஓர் இயக்கம் இயேசு என்ற பெயரை விசித்திரமான மற்றும் மாறுபட்ட போதனைகளுடன் பயன்படுத்துவதாக பெர்லிஸ் முப்தி டத்தோ டத்தோ டாக்டர் முஹமட் அஸ்ரி முன்னதாக கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)