ஜோகூர் பாரு, டிசம்பர் 11 (பெர்னாமா) -- கூலாய் - ஜோகூர்பாரு வழித் தடத்திற்கான ஒரு சிறப்பு ரயில் சேவை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
புதிய ரயில்களுக்கு சேவைக்கு காத்திருக்கும் காலக்கட்டத்தில் கெமாஸ் மற்றும் ஜொகூர் பாருவிற்கு இடையில் இதற்கு முன்னர் SHUTTLE ரயில் சேவையாக இயங்கி வந்த தற்போதுள்ள ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி இச்சேவை மேற்கொள்ளப்படவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"பயணிகளுக்கான ரயில் பெட்டியைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், புதிய ரயில் பெட்டிகளுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, கெமாஸ் மற்றும் ஜோகூர் பாரு இடையே பயணிகள் சேவைகளை வழங்கி வரும் தற்போதைய பெட்டிகளை மேம்படுத்துவோம். எனவே, இந்த அனைத்து பெட்டிகளும் சரியான முறையில் பயன்படுத்தப்படும்," என்றார் அவர்.
சுமார் 20 நிமிடங்கள் பயண நேரத்தைக் கொண்ட 16 முறை ரயில் சேவையாக இது அமையும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்த இச்சேவை ஊக்குவிப்பாக இருப்பதோடு நெரிசலையும் தனிப்பட்ட வாகனங்களைச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)