பொது

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளில் ஃபஹ்மி-க்கு உயரிய விருது

11/12/2025 07:38 PM

கிள்ளான், 11 டிசம்பர் (பெர்னாமா) -- சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுட்டின் இட்ரிஸ் ஷா-வின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, தொடர்பு அமைச்சர், டத்தோ ஃபாமி ஃபாட்சிலுக்கு டி-பி-எம்-எஸ் எனப்படும் டத்தோ படுக்கா மக்கோதா சிலாங்கூர் என்ற உயரிய பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிலாங்கூர், கிள்ளானில் உள்ள பலாய்ருங் செரி இஸ்தானா அலாம் ஷா-வில் இன்று நடைபெற்ற இவ்விழாவில் உயரிய பட்டம் மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த 98 பேரில் ஃபாமியும் ஒருவராவார்.

ஃபாமியை அடுத்து, சிலாங்கூர் மாநில புறநகர் மேம்பாடு, ஒருமைப்பாடு மற்றும் பயனீட்டாளர்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலுக்கும் அதே விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

ஆண்களுக்கான டத்தோ மற்றும் பெண்களுக்கான டத்தின் படுக்கா என்ற பட்டத்தை உட்படுத்திய டி-பி-எம்-எஸ் உயரிய அங்கீகாரத்தை மொத்தம் 16 பேர் பெற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)