சுங்காய், டிசம்பர் 12 (பெர்னாமா) -- நாட்டின் வனப்பகுதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக விவசாய நோக்கத்திற்காகக் காடுகளில் புதிய பகுதிகள் அழிக்கப்படாது.
புலிகள், குரங்குகள் மற்றும் தபீர் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் இயற்கையான வாழ்விடமாக வனப்பகுதிகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.
'''நாம் செய்ய வேண்டிய இரண்டு அல்லது மூன்று நடவடிக்கைகள் உள்ளன. முதலாவதாக, நமது மரங்கள் தோட்டங்களில் பழையதாக இருப்பதைக் கண்டால், உதாரணமாகச் செம்பனை மரங்கள். புதிய பகுதிகளைத் தேடுவதற்குப் பதிலாக மீண்டும் நடவு செய்கிறோம். இரண்டாவது, நமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரும்பகுதி விளைச்சலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இது விளைச்சலை அதிகரிப்பது பற்றியது அல்ல, நாம் அதிக வனப்பகுதிகளைப் பயன்படுத்த வேண்டும். இயலாது ஏனென்றால் காட்டு விலங்குகளுக்கு உரிமைகள் உள்ளன,'' என்று டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறினார்.
வெள்ளிக்கிழமை பேராக் சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்தை பார்வையிட்ட பின்னர் ஜொஹாரி செய்தியாளர்களிடம் பேசினார்.
காடு மற்றும் பாதுகாக்கப்பட்ட விலங்குகளைக் கூட்டாகப் பாதுகாப்பது குறித்து இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)