கூலிம், டிசம்பர் 13 (பெர்னாமா) -- தென் கொரியாவில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படும் kultus எனப்படும் குறிப்பிட்ட நம்பிக்கைகளைப் பின்பற்றும் கும்பல் குறித்து போலீஸ் கண்காணித்து வருகிறது.
இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக் கூடிய அளவில் இக்கும்பலின் செயல்பாடு இதுவரை இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''அந்த அமைப்பு, அதன் செயல்பாடுகள், உள்ளூர் நபர்களின் ஈடுபாடு மற்றும் பலவற்றைப் பற்றி சிறப்புப் பிரிவு ஒன்று எனக்கு விளக்கமளித்தது. எனவே இந்த இயக்கமானது உண்மையில் நமது பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பில் இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்'', என்றார் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்.
இன்று கெடா கூலிமில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்று நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.
சம்பந்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகள் பொதுவான முறையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அது தேசிய பாதுகாப்பு அம்சத்திற்கு இவ்வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று தாம் கருதுவதாகச் சைஃபுடின் மேலும் கூறினார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)