பொது

அடையாள அட்டையில் பாபா ஞோஞா இனத்திற்கு மாற்றும் 11 விண்ணப்பங்களுக்கு அங்கீகரிப்பு

02/01/2026 05:17 PM

சிலாங்கூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- அடையாள அட்டையில்  பாபா ஞோஞா இனத்திற்கு மாற்றுவது தொடர்பில் சுமார் 50 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 11 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய பதிவுத் துறை ஜே.பி.என் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பமும் உறுதியான சான்றுகளுடன் இருப்பதையும் எந்தவோர் ஒப்புதலையும் வழங்குவதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் இது துல்லியமாக பரிசீலிக்கப்படுவதாக ஜே.பி.என் தலைமை இயக்குநர்  டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்தார்.

''50 விண்ணப்பங்கள், 11 ஒப்புதல்கள். அதுதான் எனக்குக் கிடைத்தது. ஆனாலும், பாபா ஞோஞாவிடமிருந்து மட்டுமல்ல. அவ்வப்போது, நான்கு அல்லது ஐந்து எல்லை மாநிலங்களில் வசிக்கும் சயாம் சமூகத்தினரும் அவ்வாறு செய்கிறார்கள்.'' என்றார் டத்தோ பட்ருல் ஹிஷாம் அலியாஸ் 

ராவாங், சுங்கை புவயா-வில் இன்று உடன்பிறப்புகள் எழுவருக்கு தாமதப் பதிவு அடையாள அட்டையை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

 பாபா ஞோஞா-வின் தலைமுறையினரை அடையாள ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் கடந்த அக்டோபர் முதலாம் தேதி தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டம் சுமூகமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் செயலாக்கம் நேற்றிலிருந்து நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)