உலகம்

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி - டிரம்ப் மிரட்டல்

17/01/2026 03:15 PM

வாஷிங்டன் டி.சி., 17 ஜனவரி (பெர்னாமா) -- கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இவரின் இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

''கிரீன்லாந்திற்கும் நான் அதைச் (வரி விதிப்பு) செய்யலாம். கிரீன்லாந்துடன் ஒத்துப்போகாத நாடுகள் மீது நான் வரியை விதிக்கலாம். ஏனென்றால் தேசிய பாதுகாப்புக்கு எங்களுக்கு கிரீன்லாந்து தேவை. அதனால் நான் அதைச் செய்யலாம்,'' என டோனல்ட் டிரம்ப் கூறினார்.

வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிரம்ப் அவ்வாறு கூறினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறிவரும் டிரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும், இதற்கு ஆதரவளிப்பதில் நேட்டோ அமைப்பு முன்னணியில் இருக்க வேண்டும் என்றும் நேட்டோவின் ராணுவ செயல்திறன் பெரும்பாலும் அமெரிக்காவையே சார்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)