மிச்சிகன், 08 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்கா, தெற்கு மிச்சிகனில் வீசிய சூறாவளி மற்றும் பலத்த புயல்களினால் குறைந்தது எண்மர் உயிரிழந்தனர்.
மேலும், அதிகமானோர் காயமடைந்ததோடு, பல வீடுகள் சேதமடைந்தன.
இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை மின்சாரம் இல்லாமல் சிக்கலை எதிர்நோக்கினர்.
வெள்ளிக்கிழமை, தேசிய வானிலை சேவை அப்பகுதிக்கு சூறாவளி எச்சரிக்கையை விடுத்தவுடன், Three Rivers மற்றும் Union City நகரங்களில் சூறாவளியினால் கட்டிடங்களின் கூரைகள் பறந்து, அவ்விடம் குப்பைக் குளமாகக் காணும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
கட்டிடங்களும் கார்களும் சேதமடைந்ததோடு, கம்பங்கள், மரங்கள் மற்றும் விசைப்பலகைகள் பறந்து விழும் காட்சிகளையும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டது.
இந்நிலையில், நிலைமையைக் கண்காணிக்க மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளதாக மிச்சிகன் ஆளுநர் க்ரெட்ச்சேன் வ்ஹிட்மேர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)