உலகம்

எல்.என்.ஜி விநியோகம் குறைந்து வருவதைத் தொடர்ந்து புது டெல்லியில் போராட்டம்

12/03/2026 06:50 PM

புது டெல்லி, மார்ச் 12 (பெர்னாமா) -- திரவ பெட்ரோலிய எரிவாயு, எல்.என்.ஜி விநியோகம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரசின் மகளிர் பிரிவு, புது டெல்லியில் புதன்கிழமை போராட்டம் நடத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஏற்பட்டுள்ள எரிசக்தி பிரச்சனைகளுக்கு இடையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரின் அரசாங்கமும், போதுமான கையிருப்பைக் கொண்டிருக்கத் தவறியதாக கூறி, அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த எரிவாயு பற்றாக்குறை குறித்து தமக்கு எந்தக் கருத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் Alka Lamba தெரிவித்துள்ளார்.

'பிரதமர் சமரசம் செய்து கொண்டார்' என்ற பதாகைகளை ஏந்தியும் கோஷமிட்ட படியும் மக்கள் சாலைகளில் போராட்டத்தை நடத்தினர்.

நாடு முழுவதும் சமையல் எரிவாயுவாக எல்.என்.ஜி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா மாற்று வழிகள் மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி விநியோகங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், இரண்டு LNG சரக்கு கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் மத்திய எண்ணெய் அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)