வாஷிங்டன் டி.சி, 15 மார்ச் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க மற்ற நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்நீரிணையை ஈரான் மூட முயன்றதால், அதில் பாதிக்கப்படும் பல நாடுகள் கடல் வழியான பாதுகாப்பாக அமெரிக்காவுடன் உடன் சேர்ந்து போர்க்கப்பல்களை அனுப்பக்கூடும் என டிரம்ப் தமது Truth Social சமூக ஊட தளத்தில் தெரிவித்துள்ளார்.
உலகில் விநியோகிக்கப்படும் எண்ணெயில் 20 விழுக்காட்டிற்கு மேல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதால், அதனைப் பெறும் நாடுகள் நீரிணையைப் பாதுகாக்க வேண்டும் என்று டோனல்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
எனவே, அமெரிக்காவுடன் சேர்ந்து அந்தப் பகுதிக்குப் போர் கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை கூறியுள்ளது.
அதனை மீறி அந்தக் கப்பல்கள் கடக்க முயன்றால், அவை தாக்குதலுக்கு இலக்காகும் எனவும் ஐ.ஆர்.ஜி.சி எச்சரித்திருக்கின்றது.
அதேபோல, ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு திறந்தே உள்ளதாகவும், ஈரானின் எதிரிகளுக்கு மட்டும் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அறிவித்திருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)