பொது

சந்தை விலையைவிட மலிவானது 'மடானி ராயா விற்பனைத் திட்டம்'

15/03/2026 05:00 PM

புக்கிட் மெர்தாஜாம், 15 மார்ச் (பெர்னாமா) -- மடானி ராயா விற்பனைத் திட்டத்தின் மூலமாக சந்தை விலையைக் காட்டிலும் 30 விழுக்காடு வரை மலிவான விலையில் மக்கள் தங்களின் தினசரி தேவைக்கான பொருள்களை வாங்கிக் கொள்ள முடிகிறது.

அவற்றுடன் பினாங்கில் கூட்டுறவு வணிக நடவடிக்கைகளையும் இத்திட்டம் ஊக்குவித்துள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார். 

"இந்த விற்பனை திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக அரிசி, எண்ணெய், டின்களில் அடைக்கப்பட்ட உணவு, இறைச்சி, கோழி, முட்டை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நாங்கள் வழங்கியுள்ளோம்," என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை அமைச்சின் ஏற்பாட்டில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற மடானி விற்பனைத் திட்டத்தை தொடக்கி பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

சிறப்பு சலுகை விலையை உட்படுத்தி அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தில் முத்தாய்ப்பாக சந்தையில் 12 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் முழு கோழி, நான்கு ரிங்கிட்டிற்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அவர், ஆயிரம் கோழிகள் இவ்விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோன்று 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் ஒரு கிலோ இறைச்சியும் 23 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டு ஒருவருக்கு ஒரு கிலோ இறைச்சி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)