உலகம்

கராச்சியில் கனமழை & இடியுடன் கூடிய புயல்; 16 பேர் பலி

19/03/2026 03:43 PM

கராச்சி, 19 மார்ச் (பெர்னாமா) -- நேற்றிரவு, பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியைத் தாக்கிய கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயலால் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர்.

இத்தகவலை எதி அறவாரிய ஆம்புலன்ஸ் சேவை உறுதிப்படுத்தியது.

கனமழை காரணமாக அந்நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியதோடு, சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும், கனமழையைத் தொடர்ந்து வீசிய புயலால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரத் தடையும் ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)