கோலாலம்பூர், 31 மார்ச் (பெர்னாமா) -- வரும் ஏப்ரல் எட்டாம் தேதி முதல், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான BUDI MADANI டீசல் உதவித் தொகையை 300 ரிங்கிட் எனும் விகிதத்தில், அரசாங்கம் நிலைநிறுத்துகிறது.
இடைக்காலக் கூடுதல் உதவித்தொகையான 100 ரிங்கிட்டும் தொடரப்படுவதோடு, தனிநபர் BUDI மற்றும் வேளாண்-மூலப்பொருள் BUDI உதவித்தொகையும் மொத்தமாக 300 ரிங்கிட்டாக நிலைநிறுத்தப்படுவதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
10 கோடியே 20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அந்த உதவித் தொகையினால், ஏறக்குறைய 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைவர்.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அரசாங்கம், நன்கு அறிந்திருப்பதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்ட BUDI டீசல் திட்டம், மொத்தம் 112 கோடி ரிங்கிட் ரொக்கத் தொகையின் வழியாக மக்களின் வாழ்க்கைச் செலவினத்தையும் குறைக்க உதவியிருக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)