உலகம்

பெங்களூருவில் பல உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

பெங்களூரு, 14 மார்ச் (பெர்னாமா) -- இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் உள்ள பல உணவகங்கள் எரிவாயு பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான உணவகங்கள், சமையலுக்கு எரிவாயு கலன்களை நம்பியிருக்கின்றன.

ஈரான் மீதான போர் தொடர்வதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை தொடர்ந்து, இந்தியாவில் எரிவாயு கலன்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

எரிவாயு கலன்களை பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்கவும், முடிந்தவரை குழாய் மூலம் இயங்கும் இயற்கை எரிவாயு சேவையை பயன்படுத்தவும் இந்திய பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டது.

அதில் சுமார் 60 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.

அந்த இறக்குமதிகளில் சுமார் 90 விழுக்காடு மத்திய கிழக்கிலிருந்து பெறப்பட்டன.

[ read more ]
7h ago
 MORE NEWS
 பரிந்துரை