உலகம்

காசாவில் நீடித்து வரும் போரை நிறுத்துவீர் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்து

06/09/2024 07:31 PM

காசா, 06 செப்டம்பர் (பெர்னாமா) --  காசாவில் நீடித்து வரும் போரை நிறுத்துமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ப்ளின்கன் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, அதற்கான ஒப்பந்தம் 90 விழுக்காட்டை அடைந்துள்ளதை அவர் கோடி காட்டினார்.

"எனவே, அது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்முறையாகும். நாங்கள் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் கட்டார் மற்றும் எகிப்திய பங்காளிகள் ஹமாசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முடிந்த அனைத்தையும் செயல்படுத்துவோம். ஒன்று, ஒன்றிணைக்கும் பரிந்துரைகளில் ஹமாசை இணைய வைப்போம். பின்னர், இரு தரப்பினரும் செயல்படுவதை உறுதிசெய்வதோடு அனைத்து செயல்பாடுகளும் முன்னோக்கி இயங்குவதற்கு, அமலாக்கத்திற்கு தேவையான தகவல்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆகும்", என்று அவர் கூறினார்.

இந்த போர் நிறுத்தம் தொடர்பில் ஒப்பந்தத்தை எட்டும் நம்பிக்கையில் எகிப்து மற்றும் கட்டாரின் வழி இன்னும் சில நாட்களில் கூடுதல் பரிந்துரைகளை அமெரிக்கா முன்வைக்கும் என்று ப்ளின்கன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)