உலகம்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்

28/02/2026 04:57 PM

தெஹ்ரான், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க - இஸ்ரேல் படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

"சிறிது நேரத்திற்கு முன்பு, அமெரிக்க இராணுவம் ஈரானில் பெரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. மிகவும் கடினமான, கொடூரமான ஈரானின் ஆட்சியிடமிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே இந்த தாக்குதலின் நோக்கம்," என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் உயர் ஆட்சியாளர் ஆயத்துல்லா அலி காமெனி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குத் தக்க பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)