பொது

குழந்தைகள் தொடர்பான புகார்; பி.டி.ஆர்.எம் கண்காணிப்பில் ஒரு மத இயக்கம்

07/09/2024 07:11 PM

பாங்கி, 07 செப்டம்பர் (பெர்னாமா) -- குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஒரு மத இயக்கத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனம் தற்போது, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்-இன் கண்காணிப்பில் உள்ளதாக தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, JAKIM மற்றும் மாநில இஸ்லாமிய மதத் துறை, JAIN ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் உள்ள 154 குழுக்களில் அந்த நிறுவனமும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த நிறுவனம் தொடர்பாக சிலாங்கூர் போலீஸ் படை நான்கு புகார்களை பெற்றுள்ளதாக அயூப் கான் கூறினார்.

மேலும் இவ்வழக்கு 2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம் செக்‌ஷன் 31 உட்பிரிவு ஒன்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மதங்களுக்கு எதிரான கொள்கையை பரப்பிய குற்றம் தொடர்பாக போலீஸ் 80 புகார்களை பெற்றுள்ள நிலையில் 122 கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் விளக்கினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]