ஹோர்முஸ் நீரிணை, 03 மார்ச் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதாக ஈரானியப் புரட்சிப்படை அறிவித்துள்ளது.
நீரிணையைக் கடக்க முயற்சி செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்று ஈரான் கடந்த சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஈரானின் இந்த அதிரடி முடிவு பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நடவடிக்கையினால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்று அஞ்சப்படுகிறது.
உலகின் 20 விழுக்காட்டுக் கச்சா எண்ணெய் விநியோகம் ஹோர்முஸ் நீரிணை வழி மேற்கொள்ளப்படுகிறது.
சவுதி அரேபியா, குவைட் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் நீரிணையை நம்பியிருக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)