பொது

சேன் ராயனைப் புறக்கணித்து உடலில் காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் - பெற்றோர் மீது குற்றச்சாட்டு

18/09/2024 05:08 PM

பெட்டாலிங் ஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனவளர்ச்சி குறைபாடுடைய சிறுவன் சேன் ராயன் அப்துல் மாத்தினை அலட்சியமாக புறக்கணித்து அவனுக்கு உடலில் காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அச்சிறுவனின் பெற்றோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிரான அக்குற்றச்சாட்டு தொடர்பில்  தேசிய சட்டத்துறையிடம் அவர்கள் பிரதிநிதித்துவ மனுவைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ஷாலிசா வார்னோ விடம் ழ்சைம் இக்வான் சஹாரி மற்றும் இஸ்மானிரா அப்துல் மனாஃப் I சார்பில் வாதிடும் வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொய்ன் அத்தகவலைத் தெரிவித்தார்.

அரசு தரப்பிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் கூடிய விரைவில் பிரதிநிதித்துவ மனுவைச் சமர்ப்பிப்பார்கள்.

அவர்களின் அவ்விண்ணப்பத்திற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தின் கல்மிசா சாலே மறுப்பு தெரிவிக்கவில்லை.

பிரதிநித்துவம் குறித்த முடிவை அறிவிக்க, நீதிபதி டாக்டர் ஷாலிசா டிசம்பர் ஆறாம் தேதியை நிர்ணயித்தார்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணைக்காக அடுத்த ஆண்டு  ஜனவரி 20 தொடங்கி 24-ஆம் தேதி பிப்ரவரி 3 தொடங்கி ஏழாம் தேதி மற்றும் பிப்ரவரி 17 தொடங்கி 21-ஆம் தேதி என்றும் 15 நாட்களை அவர் நிர்ணயித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)