பொது

ஓ.பி.ஆர் விகிதத்தை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்த பி.என்.எம் முடிவு

05/03/2026 05:21 PM

கோலாலம்பூர், மார்ச் 05 (பெர்னாமா) -- ஓ.பி.ஆர் எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 2.75 விழுக்காடாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவு மற்றும் நிலையான விலை சூழலுக்கு ஏற்ப, இன்று இம்முடிவு எடுக்கப்பட்டதாக பேங்க் நெகாரா மலேசியாவின் (BNM), நாணயக் கொள்கை செயற்குழு, M-P-C அறிவித்துள்ளது.

அண்மைய வளர்ச்சியை பேங்க் நெகாரா மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், உள்நாட்டு வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தொடர்பான இடர்களின் சமநிலை மதிப்பிடப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பி.என்.எம் தெரிவித்தது.

2025-ஆம் ஆண்டின் வலிமையின் அடிப்படையில், தொடர்ச்சியான உள்நாட்டு தேவை, குறைந்து வரும் பணவீக்கம், வலுவான தொழில்நுட்ப முதலீடு மற்றும் ஆதரவான நிதி மற்றும் பணவியல் கொள்கைகள், உலகளாவிய வளர்ச்சியை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

இருப்பினும், அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)