பொது

முகப்புகளில் பணியாற்றும் குடிநுழைவு அதிகாரிகள் கைப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை

18/09/2024 05:52 PM

புத்ராஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA-வின் முகப்புகளில் பணியாற்றும்போது, குடிநுழைவு அதிகாரிகள் கைப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

சிறப்பு முகப்பு வழி அந்நிய நாட்டினரை அழைத்து வரும் மோசடி நடவடிக்கைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அந்நடைமுறை அமல்படுத்த வேண்டும் என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

சேவை மேம்பாட்டிற்கான பரிந்துரைகளில் மலேசிய குடிநுழைவுத் துறை, JIM மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகள் பணிக்கு நுழைவதற்கான மற்றும் முகப்பில் இருப்பதற்கான கால அட்டவணையை, வேறு தரப்பினர் செய்ய வேண்டும் என்றும் எஸ்பிஆர்எம் பரிந்துரைத்தது.

"நிர்வாகப் புலனாய்வுப் பிரிவு (BPT), முழு வேலை செயல்முறைகளை பார்ப்பதற்கு இப்போதிலிருந்து இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு, மேம்பாட்டிற்காக குடிநுழைவு மற்றும் உள்துறை அமைச்சிடம் பரிந்துரை செய்யும்," என்றார் அவர்.

பணியில் இருக்கும்போது முகவர்கள் அதிகாரிகளை எளிதில் அணுக முடிவது முதன்மை பிரச்சனையாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)