அட்டாரி, 01 மே (பெர்னாமா) -- இந்தியாவில் மருத்துவ விசாக்களில் உள்ளவர்களைத் தவிர்த்து, பாகிஸ்தானிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
ஆனால், பல குடும்பங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய வட பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் போராடி வருகின்றனர்.
கடந்த வாரம் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த கொடியத் தாக்குதலுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தான் குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று புது டெல்லி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நேற்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய எல்லைப்பகுதியைக் கடப்பதைக் காண முடிந்தது.
சிலர் தாங்களாகவே வெளியேறும் வேளையில், மற்றவர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
''நீங்கள் சட்டவிரோதமானவர் என்றும், நீங்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் (அதிகாரிகள்) என்னிடம் சொன்னார்கள். நான் இப்போதுதான் என் மகனைப் பெற்றெடுத்தேன். 14 நாட்கள்தான் ஆகின்றன. எனக்கு சி-பிரிவு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. (அறுவை சிகிச்சை காரணமாக) எனக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை, நேற்று இரவு எனது தையல்கள் அகற்றப்பட்டன. இன்று நான் இங்கு வந்துவிட்டேன். அவர்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்கவில்லை,'' என்று பாகிஸ்தானியரான சாரா கான் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலினால், பதற்றங்கள் அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் வட்டாரத்தைப் பிரிக்கும் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுகளும் அதிகரித்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)