பொது

10 நாட்களில் கிளாந்தானில் 2,051 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு 

18/09/2024 07:48 PM

கோத்தா பாரு, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இம்மாதத்தில் கிளாந்தான் மாநிலத்தில் அதிகமான டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி இதுவரையில் அம்மாநிலத்தில் 2,051 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன்பொருட்டு அம்மாநிலத்தில் டெங்கி சம்பவங்கள்  8.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 1,892 சம்பவங்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்ததாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் கூறினார்.

எனவே, குடியிருப்பு மற்றும் பொது இடங்களை அங்குள்ளவர்கள் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன், டெங்கி கொசு வளரும் நடவடிக்கைகளை உடனே முறியடிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)