விளையாட்டு

ஹரிமாவ் மலாயா அணியின் செயல்திறனை உறுதிபடுத்த சில கோரிக்கைகள் முன்வைப்பு

19/09/2024 08:01 PM

கோலாலம்பூர், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டின் தேசிய காற்பந்து குழுவான ஹரிமாவ் மலாயா அணியின் மேம்பட்ட செயல்திறனை உறுதிபடுத்த, முறையான திட்டமிடல் உட்பட KPI எனப்படும் செயல்திறன் குறிகாட்டியைத் தயாரிக்குமாறு மலேசிய காற்பந்து சங்கம், FAM கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FAM தலைமைத்துவத்தை இன்று சந்தித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கேட்டுக் கொண்டதை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

நாட்டின் தேசிய காற்பந்து குழுவான ஹரிமாவ் மலாயா அணியின் மேம்பட்ட செயல்திறனை உறுதிபடுத்த, முறையான திட்டமிடல் உட்பட KPI எனப்படும் செயல்திறன் குறிகாட்டியைத் தயாரிக்குமாறு மலேசிய காற்பந்து சங்கம், FAM கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FAM தலைமைத்துவத்தை இன்று சந்தித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கேட்டுக் கொண்டதை, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது. 

23 வயதிற்குட்பட்ட அணி உட்பட தேசிய அணியை பலப்படுத்துவதற்கு உதவும் வகையில் ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுகீடு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சு மற்றும் கேபிஎஸ் அந்த ஒதுக்கீட்டை அவ்வப்போது கண்காணிக்கும். 

தேசிய விளையாட்டுச் சூழலை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிப்பதால், தேசிய குழுவுக்கு - வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்ற விளையாட்டுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைக் குறைக்காது எனவும் பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதனிடையே, தேசிய விளையாட்டு மன்றம், எம்.எஸ்.என் ஏற்று நடத்தும் தேசிய காற்பந்து மேம்பாட்டு திட்டம், NFDP-இன் செயல்திறனை மேம்படுத்துவதற்கு ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் உதவியை நாடவிருப்பதாக கேபிஎஸ் தெரிவித்துள்ளது. 

-- பெர்னாமா 


பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)