பாங்கி, 04 நவம்பர் (பெர்னாமா) -- தற்போது அதிகம் பரவி வரும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் காலக்கட்டத்தில் மக்களைச் சென்றடையும் செய்திகள் உண்மையானதாகவும் தரமானதாகவும் இருப்பதை ஊடகவியலாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
ஊடகவியலாளர் தொழில் ஊடக நெறிமுறைகள் முக்கிய அம்சமாக கடைப்பிடிப்பதோடு செய்திகளை வழங்குவதில் நேர்மையை உறுதிசெய்வது ஊடகவியலாளர்களின் கடப்பாடாகும் என்று மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி, நூர்-உல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
ஊடகத்துறையில் உள்ள நெறிமுறைகளில் சுயநலன் கருதாமல் செய்தி வழங்குவது, தகவல் உண்மையானதாக இருப்பதை உறுதிசெய்வது மற்றும் தகவல் வழங்கியவரின் ரகசியத்தன்மையை மதிப்பது ஆகியவையும் அடங்கும் என்று நூர்-உல் அஃபிடா கமாலுடின் குறிப்பிட்டார்.
''மிகவும் பிரபலமான தளங்களில் ஊடகமும் அடங்கும். எனவே, நெருக்கடியின் தாக்கத்திற்கு ஆளாகாமல் உண்மையான செய்திகளை வழங்கி நாம் அனைவரும் கொடுக்கப்பட்ட நம்பிக்கையைப் பாதுகாப்பது அவசியமாகும். வாசகர் அல்லது பார்வையாளரின் நம்பிக்கையைப் பெற வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பது ஊடகவியலாளருக்கு மிகவும் அவசியம். இதையே, பெர்னாமாவில் நாங்கள் கடைப்பிடிக்கிறோம், '' என்றார் அவர்.
இன்று, பாங்கியில் உள்ள மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுடனான 2024 ஹவானா பயண நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)