ரியாத், 09 நவம்பர் (பெர்னாமா) -- சவூதி அரேபியா, ரியாத்தில் நடைபெற்று வரும் WTA மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு அமெரிக்காவின் கோகோ காஃப் முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில், அவர் சீனாவின் ஸெங் கின்வென் உடன் மோதுகின்றார்.
நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காஃப், உலகின் முதன் நிலை ஆட்டக்காரரான அரினா சபலென்காவை, கடும் போட்டிக்குப் பின்னர் நேரடி செட்களில் வீழ்த்தினார்.
சுமார் 1 மணிநேரம் 49 நிமிடங்கள் வரை நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில்,
உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான கோகோ காஃப், 6-7, 3-6 என்ற நிலையில் வெற்றி அடைந்தார்.
2010-ஆம் ஆண்டில், டென்மார்க்கின் கரோலின் விஸ்நியாக்;கிக்குப் பிறகு, WTA இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீராங்கனையாக கோகோ காஃப் விளங்குகிறார்.
இப்போட்டியின் வெற்றியாளருக்கு 2 கோடியே 11 லட்சம் ரிங்கிட் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
மகளிருக்கான டென்னிஸ் போட்டி வரலாற்றில், இது மிகப்பெரிய பரிசுத் தொகையாகும்.
இதனிடையே, உலகின் முதன்நிலை வீராங்கனையாக இவ்வாண்டை நிறைவு செய்யும் சபாலென்கா, ஆட்டத்தில் தாம் செய்த சில தவற்றால், இறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)