கோத்தா பாரு, 10 நவம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு நடத்தப்பட்ட தாரிங் வவாசான் சோதனை நடவடிக்கையில், தாய்லாந்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மளிகைப் பொருள்கள் அடங்கிய பெட்டிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு உள்நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரந்தாவ் பஞ்சாங்கிலுள்ள சபாங் அம்பாட் சலாம் சாலையில், மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையின் போது ஒரு லாரியை நிறுத்திய வேளையில் அந்தக் கடத்தல் நடவடிக்கையைப் பொது நடவடிக்கைப் படை,பிஜிஏ கண்டறிந்தது.
பிற்பகல் மணி 2.30 மேற்கொள்ளப்பட்ட அச்சோதனை நடவடிக்கையின் போது, லாரியில் அப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில், பிஜிஏ அதிகாரி டத்தோ நிக் ரோஸ் அஸ்ஹான் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
அந்தக் கடத்தல் பொருள்களை அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
சுங்கத்துறை சட்டம் செக்ஷன் 135 உட்பிரிவு 1 உட்பிரிவு E-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)