ரியாத், 10 நவம்பர் (பெர்னாமா) -- WTA மகளிர் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளராக அமெரிக்காவின் கோகோ காஃப் வாகை சூடியுள்ளார்.
இதன் வழி, 2004ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற மரியா ஷரபோவாவுக்குப் பிறகு WTA கிண்ணத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 20 வயதான காஃப் சீனாவின் ஜெங் கின்வென்வுடன் விளையாடினார்.
முதல் செட்டில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெங் கின்வென் 3-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.
இருப்பினும் அடுத்த இரண்டு செட்களை 6-4 7-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றி காஃப், WTA கிண்ணத்தை தட்டிச் சென்றார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் WTA கிண்ணத்தை வென்ற அமெரிக்கராகவும் காஃப் சாதனை படைத்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)