உலகம்

உக்ரேன் உடனான பூசலை இன்னும் பெரிதாக்க வேண்டாம் - டோனல்ட் டிரம்ப்

11/11/2024 05:17 PM

நியூயார்க், 11 நவம்பர் (பெர்னாமா) --   உக்ரேன் உடனான பூசலை இன்னும் பெரிதாக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபராகி இருக்கும் டோனல்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வலியுறுத்தினார்.

இருவரும் பேசிக்கொண்ட தொலைப்பேசி அழைப்பின் மூலம் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸைத் தோற்கடித்து, எதிர்பாரா வெற்றியைத் தன்வசமாக்கிக் கொண்ட சில தினங்களுக்கு பின்னர், புளோரிடா, மார்-எ-லாகோவில் உள்ள தமது வீட்டில் இருந்து டிரம்ப் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்.

ஐரோப்பாவில் கணிசமான அளவில் அமெரிக்க ராணுவப் படையினர் இருப்பதைத் டிரம்ப் நினைவூட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, "எதிர்காலத்தில் உக்ரைனில் போரின் தீர்வு" பற்றிய கூடுதல் விவாதங்களில் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ரஷ்யா- உக்ரேன் போருக்கு ஒரே நாளில் தீர்வு கண்டுபிடிக்கவிருப்பதாக டிரம்ப் பல முறை கூறியிருந்தார்.

அதனால், உக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆதரவு இனி எப்படி இருக்கும் என்ற அக்கறைகள் அதிகரித்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)