ரோம், 11 நவம்பர் (பெர்னாமா) -- கிளப் நிர்வாகிகளைப் பதவி நீக்கம் செய்வது எ.எஸ் ரோம்மில் தொடர்கிறது.
Serie A ஜாம்பவான எ.எஸ் ரோம்மின் நிர்வாகி இவான் ஜூரிக்கை அக்கிளப் தற்போது நீக்கியுள்ளது.
கடந்த செப்டம்பரில் நியமிக்கப்பட்ட குரோஷியாவைச் சேர்ந்த அவர், இந்தப் பருவத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது பயிற்றுநர் ஆவார்.
Bologna-விடம் 2-3 கோல்களில், எ.எஸ் ரோம் தோல்வி கண்டது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த நான்கு போட்டிகளிலும் அது தொடர் தோல்வியைச் சந்தித்தது.
கிளப்பின் இந்த மோசமன அடைவு நிலையால் இவான் ஜூரிக் நீக்கப்பட்டார்.
முன்னதாக, டேனியல் டி ரோஸியின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, ரோம்மால் நியமிக்கப்பட்ட மூன்றாவது பயிற்சியாளர் ஜூரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
லீக்கில் உடினீஸ் மற்றும் வெனிஸியாவுக்கு எதிராக இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்த பிறகு, 49 வயதான ஜூரிக் அக்கிளப்பிற்கு நல்லதொரு தொடக்கத்தை உருவாக்கினார்.
இருப்பினும், ஆறு லீக் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே ரோம் வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)