ஜார்ஜ்டவுன், 13 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வியாழக்கிழமை ஒரு தந்தையையும் அவரின் மகளையும் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மீது இரு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மாஜிஸ்திரேட் நத்ரதுல் நைம் முகமது சைதி முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது 32 வயதுடைய முஹம்மது ஃபர்ஹான் இஸுதீன் ரோஸ்மான், அது தனக்குப் புரிந்ததாக தலையசைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பினாங்கு மருத்துவமனையில் இன்னும் சிகிச்சைப் பெற்று வருவதால் விசாரணை அங்கு மேற்கொள்ளப்பட்டது.
அவற்றுடன், இக்கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதால அவரிடமிருந்து வாக்கு மூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த நவம்பர் ஏழாம் தேதி, ஆயர் ஈத்தாம், ஜாலான் லெங்கோக் ஆங்சனாவில் உள்ள ஸ்ரீ ஐவரி அடுக்குமாடி குடியிருப்பில், 62 வயதுடைய சுல்கிஃப்லி இப்ராஹிம் மற்றும் அவரின் மகளான 30 வயதுடைய , சித்தி சுலைலா சுல்கிஃப்லி ஆகியோரைக் கொலை செய்ததாக முஹம்மது ஃபர்ஹான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கின் அடுத்தகட்ட செவிமடுப்பு அடுத்தாண்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)