உலகம்

ஆபத்தான நிலையை எட்டிவரும் லாகூர் காற்றுத் தூய்மைக்கேடு

14/11/2024 04:44 PM

லாகூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தான், லாகூரில் நிலவி வரும் காற்றுத் தூய்மைக் கேடு மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

இந்நிலை நீடித்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்று ஐக்கிய நாடுகளின் அனைத்துலக குழந்தைகள் நிதி அமைப்பு UNICEF எச்சரித்திருக்கிறது.

பஞ்சாபில் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் துரித முயற்சிகள் மேற்கொள்ளப்பட  வேண்டும் என்று UNICEF பாகிஸ்தான் அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளது.

லாகூரில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவனையில் அதிகமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

புகை மூட்டத்தால் ஏற்படும் சுவாசக் கோளாறினால் பல குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காற்றுத் தூய்மைக் கேட்டினால், ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக பாகிஸ்தானில் உள்ள UNICEF பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் தெரிவித்தார்.

பெரும்பாலான வெளிப்புற நடவடிக்கைகளுக்கு பஞ்சாப் மாநிலம் தடை விதித்துள்ளது.

மேலும் மோசமான காற்று தூய்மைகேட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க திங்கட்கிழமை முதல் சில பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் மற்றும் பேரங்காடிகளை மூடவும் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)