லிமா, 14 நவம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு பெரு நாட்டின் உயரிய விருதான "El Sol del Peru" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அரசாங்கத் தலைவர் என்ற அடிப்படையில் அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நேற்று பெரு, லிமாவில் உள்ள அரசாங்க அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,அதன் அதிபர் Dina Ercilia Boluarte Zegarra பிரதமருக்கு இவ்விருதை வழங்கி கௌரவித்தார்.
"El Sol del Peru" விருது, அரசர், நாட்டுத் தலைவர், அரசாங்கத் தலைவர், வெளியுறவு அமைச்சர், மாநில அமைச்சர் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் ஆகியோருக்கே வழங்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர், லத்தீன் அமெரிக்காவிற்கு அன்வார் தமது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)