மலாக்கா,14 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு கழகமான,MIROS அறிமுகப்படுத்தியுள்ள மின்சார வாகனங்களுக்கான மூன்று பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், அந்த வாகனங்களின் பாதுகாப்பு நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்திருக்கிறார்.
"ஏனென்றால், போக்குவரத்து அமைச்சு மற்றும் ஜே.பி.ஜே ஆகியவை (மின்சார வாகனம்) ஈ.வி.களுக்கு ஒரு சிறப்பு எண் பலகையைச் செயல்படுத்துகின்றன. காரணம், அதனைக் கொண்டு ஈ.வி. வாகனத்தைக் கண்டறிய இயலும். ஏனென்றால், இது ஈ.வி.யா அல்லது வழக்கமான வாகனமா என்று அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பிரத்யேகமான எண் பலகை வைத்து அது ஈ.வி என்று நமக்குத் தெரியும்,'' என்றார் அவர்.
வியாழக்கிழமை, மலாக்கா அயர் மோலெக்கில் மின்சார வாகனங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியீடு செய்த பின்னர் அந்தோனி லோக் செய்தியாளர்களிடம் பேசினார்.
மின்சார வாகனங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த கார் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்துலக தரப்புகளுடன் தனது அமைச்சு தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)