ஜார்ஜ்டவுன்,14 நவம்பர் (பெர்னாமா) -- ஊடகத்துறையில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொள்ள அத்துறையில் பயிலும் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்களிலிருந்து பெறப்படும் தகவல்களைப் புரிந்துகொள்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் ஊடகத்துறையில் பயிலும் மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த வேண்டும் என்று மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் தலைமை செயல்முறை அதிகாரி, நூர்-உல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
''தொடர்பு அமைச்சு பரிந்துரைத்தபடி, இணையத்தைப் பயன்படுத்துவதால் எதிர்மறையான விவகாரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, இணையத்தை சரியாகப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம், '' என்றார் அவர்.
பினாங்கு, மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தின் மாணவர்களுடன் நடைபெற்ற 2024 HAWANA நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நூர்-உல் அஃபிடா செய்தியாளர்களுடன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 500 பல்கலைகழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)