பொது

நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஓ-பி-இன் கீழ் பகடிவதை சம்பவங்கள் கையாளப்படுகின்றன

14/11/2024 07:26 PM

கோத்தா கினாபாலு, 14 நவம்பர் (பெர்னாமா) -- பள்ளிகளில் நடக்கும் ஒவ்வொரு பகடிவதை சம்பவத்தையும் கல்வி அமைச்சின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறை, எஸ்.ஓ.பி-இன் அடிப்படையிலேயே அவ்வமைச்சு கையாள்கிறது.   

பெற்றோர்கள் மற்றும் சமூகம் உட்பட பல்வேறு தரப்பினர் இதில் உட்படுத்தப்படும் பட்சத்தில், பகடிவதை சம்பவங்களை இந்த அணுகுமுறையின் மூலம் மிகவும் திறம்பட கையாள முடியும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் நம்பிக்கை தெரிவித்தார். 

தற்போதுள்ள எஸ்.ஓ.பி செயல்முறையில் மனநிறைவுக்கொள்ளாதவர்கள் அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ள அமலாக்கத் தரப்பிடம் சமர்ப்பிக்கவும் அமைச்சு இடமளிப்பதாக ஃபட்லினா கூறினார். 

இன்று, சபா, கோத்தா கினாபாலு, லோக் யூக் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற Gerakan Kepimpinan MADANI: Hentikan Buli எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]