இந்தியா, 15 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியா, ஆக்ராவில் உள்ள இந்தியாவின் காதல் சின்னமான தாஜ்மஹாலும் புகைமூட்டத்தால் சூழ்ந்துள்ளது.
17-ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்றியுள்ள தோட்டங்களில் இருந்து அதனைக் காண்பது அரிதாகவே உள்ளது.
இதனிடையே, அம்ரிட்சாரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோயிலையும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்திருக்கின்றது.
அதோடு, புது டெல்லியின் அனைத்துலக விமான நிலையம் இந்நிலையை எதிர்கொண்டுள்ளதால், விமானங்களும் திசை திருப்பப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]