கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- வணிகக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் செயல் முறை மிகவும் சிக்கலாக உள்ளதாக டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.
உதாரணத்திற்கு deep fake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை காணொளிகள், படங்கள் அல்லது ஒலி வடிவில் போலியான உள்ளடக்கத்தை உருவாக்கி மக்களை ஏமாற்ற வழிவகுப்பதாக ரசாருடின் ஹுசேன் விளக்கினார்.
''இந்த முன்னேற்றம் (ஏ.ஐ), குறிப்பாக இணைய மோசடி குற்றங்களில், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைத் தடுப்பதற்கு, அதிக செயல்திறன் மிக்க மற்றும் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்மை வலியுறுத்துகிறது,'' என்றார் அவர்.
SUPER : டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் / தேசிய போலீஸ் படைத் தலைவர்
வெள்ளிக்கிழமை, புக்கிட் அமானில் நடைபெற்ற போலீஸ் துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது ரசாருடின் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)