பொது

2024 மூன்றாம் காலாண்டில் 5.3 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சி

15/11/2024 05:11 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) --   வலுவான முதலீட்டு நடவடிக்கைகளும் ஏற்றுமதியில் அடைந்துள்ள முன்னேற்றமும், 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 5.3 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.9 விழுக்காடாக வளர்ச்சியடைந்த நிலையில், 2024-இன் முதல் மூன்று காலாண்டுகளில் அதன் வளர்ச்சி சராசரியாக 5.2 விழுக்காடு பதிவாகியதாக  பெங்க் நெகாரா மலேசியா, BNM ஆளுநர்  டத்தோ ஶ்ரீ அப்துல் ரஷிட் காஃபோர் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அப்துல் ரஷிட் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)