பொது

சமூக ஊடகங்களுக்கான உரிமம் வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதி

15/11/2024 05:46 PM

புத்ராஜெயா, 15 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து சமூக ஊடகங்கள் மற்றும் இணைய செய்தி சேவைக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பு அல்லது உரிமம் வழங்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இணையப் பகடிவதை உட்பட அங்கு உண்டாகும் பல்வேறு பிரச்சனைகளைக் கையாளும் பொருட்டு சமூக ஊடகத் தளங்களுக்கு உரிமம் வழங்குவது அத்தியாவசிய ஒன்று என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். 

பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப டிக்டோக் சமூக வலைத்தளம் அளித்த உறுதிபாட்டை, குறிப்பாக, இணையப் பகடிவதை மற்றும் மோசடி அச்சுறுத்தல்கள் போன்ற சிக்கல்களைக் கவனிப்பதற்கான அதன் உத்தரவாதத்தை தொடர்பு அமைச்சு வரவேற்பதாக ஃபஹ்மி கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]