உலகம்

பாகிஸ்தானின் லோக் மேளா விழா

16/11/2024 06:00 PM

இஸ்லாமாபாத், 16 நவம்பர் (பெர்னாமா) -- பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பாகிஸ்தானின் 'லோக் மேளா' திருவிழாவிற்காக, அந்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் இஸ்லாமாபாத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

நவம்பர் 8 தொடங்கி நவம்பர் 17, நிறைவடையும் இவ்விழாவின் முதல் நாள் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இந்தக் கலைஞர்களின் பஞ்சாபி மொழியைக் கேட்பதற்கும், இசையை ரசிப்பதற்கும் அதிகமான மக்கள் அங்கு ஒன்று கூடுகின்றனர்.

அங்குள்ள, கடை வீதிகளில் பாரம்பரிய உடைகள், நகைகள், கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு வியாபாரமும் செய்யப்படுகின்றன.

அதோடு, மட்பாண்டங்கள் மற்றும் மர கைவினைப்பொருட்கள் பார்வையாளர்களின் முன்னிலையில் கைவினை கலைஞர்களால் உருவாக்கவும் படுகின்றன.

பாரம்பரிய பாகிஸ்தானிய உணவு வகைகளும் அங்குள்ள கடைகளில் கிடைக்கும்.

அந்நாட்டின் தேசிய நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய நிறுவனமான லோக் விர்சா இந்தத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)