வாஷிங்டன், 16 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக கரோலின் லெவிட் எனும் இளம் பெண்ணை அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
டிரம்பின் மாற்றத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக 27 வயதான லெவிட் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் வரலாற்றில் இவரே இந்த பொறுப்புக்கு முதல் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இப்பொறுப்பில் இருந்த ரொனால்ட் ஜீக்லருக்கு 29 வயதாகும்.
நிர்வாகத்தின் போது மக்களின் பிரதிநிதியாகவும், வரலாற்று ரீதியில் செய்தியாளர்களுக்குத் தினசரி விளக்கங்களை வழங்குவதில் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக கரோலின் லெவிட் பணியாற்றுவார்.
இதனிடையே, தமது முதல் பதவிக்காலத்தில் முன்பு இருந்த விதிமுறைகளைக் கடந்து டிரம்ப் புதிய பாணியில் செய்தித் தொடர்பாளரை நியமித்துள்ளார்.
2017 தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது அவரது அணிகள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு நான்கு ஊடக செயலாளர்களை அவர் கொண்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)