உலகம்

ஷாதி அகதிகள் முகாமின் ஒரு பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்

17/11/2024 02:03 PM

காசா, 17 நவம்பர் (பெர்னாமா) --   தற்போது இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருக்கும் காசாவின் ஷாதி அகதிகள் முகாமில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

குறைந்தது 20 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்தி வரும் அந்த அபு அஸ்ஸி பள்ளியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளுக்குள் இன்னும் மக்கள் சிக்கியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடி கருத்து எதையும் வெளியிடவில்லை.

சனிக்கிழமை, அப்பகுதியைச் சுற்றி இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)