கொழும்பு, 18 நவம்பர் (பெர்னாமா) -- இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றார்.
இன்று இலங்கையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அதன் அதிபர் அனுர குமார திசநாயக்கே நிதி அமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையை மீட்டெடுக்கும் பொறுப்பில் புதிய அமைச்சர்கள் கவனம் செலுத்துவர் என்று அனுர குமார திசநாயக்கே தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்ற திசநாயக்கே கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இன்று புதிய அமைச்சர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)