பொது

ஐ.நா-வின் VETO அதிகாரம் விரிவாக்கம் காண வேண்டும்  

19/11/2024 04:01 PM

ரியோ டி ஜெனிரோ, 19 நவம்பர் (பெர்னாமா) - ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் கீழ் ஐந்து நிரந்தர நாடுகள் கொண்டிருக்கும் ஐ.நா-வின் VETO அதிகாரம் இன்னும் விரிவாக்கம் காண வேண்டும். 

தற்போதுள்ள அமைப்பு நியாயமற்றது என்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து இதற்கான பிரதிநிதித்துவம் அவசியம் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

"அடுத்த கேள்வி, ஐக்கிய நாடுகள் சபை. கடந்த 50 ஆண்டுகளாக நாம் ஐக்கிய நாம் சபையின் சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறோம். நாம் இலட்சியங்கள், மனிதாபிமான மதிப்புகள் பற்றிப் பேசுகிறோம். நாம் கல்வி பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து பிரதிநிதித்துவம் இல்லை. லத்தீன் அமெரிக்காவிற்குப் பிரதிநிதித்துவம் இல்லை யார் கவலைப்படுகிறார்கள்?,'' என்றார் அவர்.

நேற்று, G20 மாநாட்டில் 'உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்' எனும் அமர்வில் பேசிய பிரதமர் அன்வார் அவ்வாறு கூறினார்.  

சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவே ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் VETO அதிகாரம் கொண்டுள்ள ஐந்து நாடுகளாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)