விளையாட்டு

துபாய் பொது டென்னிஸ்; ரூபலவ் வெற்றி

26/02/2026 04:52 PM

துபாய், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- 2026 துபாய் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லவ் தகுதி பெற்றார்.

இன்று அதிகாலை நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில், அவர் பிரான்சின் யூகோ ஹம்பர்ட்டைத் தோற்கடித்தார்

முதல் செட் ஆட்டத்தை 6-4 என்ற நிலையில் வெற்றிப்பெற்ற ரூப்லவ் இரண்டாம் செட்டில் 6-7 என்ற புள்ளிகளில் ஹம்பர்ட்டிடம் தோல்வி அடைந்தார்.

விட்ட இடத்தை பிடிக்க முயன்றதன் பலனாக 6-3 என்ற நிலையில் மூன்றாம் செட்டைக் கைப்பற்றி ரூப்லவ் அடுத்த ஆட்டத்தில் கால் வைத்தார்.

காலிறுதி ஆட்டத்தில் அவர் ஆர்தர் ரிண்டர்க்னெக்குடன் மோதுகின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)