கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) - மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
"மாநிலங்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்னதாக நான் கூறியதைப் போன்று, மின்னியல் சிகரெட்டை அப்போது நம்மால் தடை செய்ய முடியவில்லை. எனவே அதை கண்காணிப்பதற்கான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். என்னைப் பொருத்தவரையில் தடை செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் அதை கண்காணிக்க வேண்டும்," என்றார் அவர்
மின்னியல் சிகரெட்டை முழுமையாக தடை செய்ய வேண்டுமென்று பகாங் சுல்தான் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சுல்கிப்ளி அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)