பொது

இரண்டு லட்சம் கோடி ரிங்கிட்டை கடந்த மலேசிய பங்குச் சந்தை மூலதனம்

20/11/2024 06:29 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) --  நாட்டின் தற்போதைய பொருளாதார மீட்சியைப் பிரதிபலிக்கும் மலேசியாவின் பங்குச் சந்தை மூலதனம், இரண்டு லட்சம் கோடி ரிங்கிட்டை கடந்துள்ள வேளையில், இது 45 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்குச் சமமானதாகும்.

முதலீட்டாளர்களின் நீடித்த நம்பிக்கையையும் மலேசியாவின் மூலதனச் சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் உறுதி செய்ய ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் முக்கியம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 63வது உலக செலாவணி கூட்டமைப்பு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்திர கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ அன்வாரின் உரையை இரண்டாவது துணை நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் வாசித்தார்.

"இதன் அடிப்படையில், நமது மூலதனச் சந்தை சிறப்பாகவும் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இருப்பதையும் உறுதிசெய்யும் தொடர் முயற்சிக்காக மலேசியா பாதுகாப்பு ஆணையம் மலேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டையும் நான் பாராட்ட வேண்டும்", என்று அவர் கூறினார்.

வணிகம் மற்றும் சமுதாயத்தின் வழியை வடிவமைப்பதில் மூலதனச் சந்தையின் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கிப்பதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)