பொது

தம்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து மறைந்த முன்னாள் நிதியமைச்சர் விடுவித்து விடுதலை

20/11/2024 07:03 PM

கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- தமது சொத்துகளை அறிவிக்காமல் அறிவிக்கையைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இருந்து மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுதீனைக் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்து விடுதலை செய்தது.

அந்த சொத்துக்களில் கோலாலம்பூர், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள பல ஆடம்பர வாகனங்கள், நிறுவனங்கள் மற்றும் நிலமும் அடங்கும்.

குற்றவியல் நடைமுறை சட்டம் செக்‌ஷன் 254 உட்பிரிவு 3இன் கீழ், நீதிபதி அஸுரா அல்வி அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

டைம் மறைவைத் தொடர்ந்து தமது தரப்பு, இனி அவருக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடராது என்று, முன்னதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் Datuk வான் ஷஹாருதீன் வான் லடின் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்வழக்கு நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெசர்ஸ் ராஜ் & சசிடமிருந்து தங்கள் தரப்புக்குக் கடிதம் கிடைத்ததாக வான் ஷஹாருதீன் கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்பு செக்‌ஷன் 145 உட்பிரிவு 3இன் கீழ் வழக்கை தொடர்வதற்கான அதிகாரம் அரசு தரப்பிற்கு உள்ளதாக வான் ஷஹாருதீன் விளக்கினார்.

இம்மாதம் 13ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டைம் தமது 86ஆவது வயதில் காலமானார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)