கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், SPRM மேற்கொண்டு வரும் விசாரணையை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை.
ஊழலின் அறிகுறிகளை அடியோடு அழிக்காவிடில், நாடு பாதுகாப்பாக இருக்க முடியாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
''ஊழலுடன் தொடங்கினால், அந்நடவடிக்கை மிகவும் கண்டிப்பானது, அது எளிதானது அல்ல என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினம். காரணம் பணக்காரர்களின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் சபாவில் எழுந்திருக்கும் பிரச்சனைகள் உட்பட இது (விசாரணை) தொடரும் என்று எஸ்.பி.ஆர்.எம் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது, '' என்றார் அவர்.
ஊழலை எதிர்க்கும் முயற்சிகள் உட்பட, அரசாங்கம் இரண்டு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு மடானி அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பென்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிமின் கேள்விக்கு அன்வார் பதிலளித்தார்.
ஊழலைக் கையாள்வதற்கும் அதனை எதிர்த்து போராடுவதற்கும் அரசாங்கத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)